நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இலக்கியவீதி இனியவன் மறைவு: டத்தோஸ்ரீ சரவணன் இரங்கல் 

சென்னை:

சென்னை கம்பன் கழக செயலாளர் இலக்கியவீதி இனியவன் அவர்களுடய மறைவு தமிழ் கூரும் நல்லுலகிற்கு பேரிழப்பு என்று ம இ கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் தனது இரங்கல் செய்தியில், 

சென்னை கம்பன் கழகம் தொடங்கி பல்வேறு நிலைகளில் தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் இலக்கியவீதி இனியவன் என்றால் மிகையாகாது. 

அவரது இழப்பு மலேசியத் தமிழர்களுக்கு ஒரு பேரிடியாக வந்து சேர்ந்தது. குறிப்பாக இறப்பு என்பது இயற்கை என்றாலும் பார்த்து பழகிய மனிதர்கள் உலகை விட்டுப் பிரியும் போது மனம் கனக்கிறது, 

அன்னாரைப் பிரிந்து மீளாத்துயரில் அவரது குடும்பத்தாருக்கும் கம்பன் கழக பொறுப்பாளர்களுக்கும் இலக்கிய உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவனடி சேர வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு  டத்தோஸ்ரீ எம் சரவணன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset