நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஏகத்துவ ஒளி பரவட்டும்! சூழும் சோதனைகள் விலகட்டும்! - ஹஜ் சிந்தனைகள்

இஸ்லாமியர்களுக்கு இரண்டே கொண்டாட்டங்கள். ஒன்று நோன்புப் பெருநாள். மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள்.

இந்த இரு திருநாள்களும் கொண்டாட்டங்களும், மகிழ்வும் நிரம்பியவை என்றாலும் இப் பெருநாள்கள் தரும் செய்திகள் ஆழமானவை, படிப்பினை நிறைந்தவை.

ஹஜ்ஜுப் பெருநாள் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வை மையப்படுத்தியது.

ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக எத்தகைய இடர் வந்தாலும் அதனை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்து நிற்பதையும், அத்தகைய எதிர் கொள்ளலின் போது இறைவனின் உதவியும் வெற்றியும் கிடைப்பதையும் இப்ராஹீம் நபியின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது.

அநீதியாளனுக்கு முன்னால் நாம் அடங்கிப் போய்விடாமல் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும். அப்போது ஏற்படும் இடர்களும் இன்னல்களும் நம்மை கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்கச் செய்துவிடக் கூடாது என்ற பெரும் நம்பிக்கையை இப்ராஹீம் நபியின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது.

சோதனைகளின் போது துவண்டு விடாமல், நம்பிக்கை குலைந்துவிடாமல் அந்தச் சோதனைகளின் போது அழகிய பொறுமையுடன் உறுதியாக நிலைத்து நின்றால் இறைவனின் உதவி கிடைக்கும் என்பதையும் இத்திருநாள் நமக்கு உணர்த்துகிறது.

ஒரே இறைவனை ஏற்று அவனுக்கு அடிபணிந்து வாழ்வதனால்  மட்டுமே நாம் ஈடேற்றம் பெற முடியும் என்பதை இந்த ஏகத்துவத் திருநாள் நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த ஏகத்துவப் பிரகடனத்தை உலகளாவிய ஒன்றுகூடலான ஹஜ்ஜுல் ஹாஜிகள் உரத்து முழங்குகின்றார்கள்.

இந்த ஏகத்துவப் பேரொளியை உள்ளத்தில் ஏந்தி அசத்திய, அறியாமை இருளகற்ற நாம் தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

இந்த ஏகத்துவப் பேரொளியால் உலகம் வெளிச்சம் பெறட்டும்.

எல்லாப் புறங்களிலும் நம்மை நெருக்கும் சோதனைகள் விலகட்டும்.

பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள். சகோதர சமுதாயச் சொந்தங்களுக்கு இந்தப் பெருநாளின் பேரன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*ஈத் முபாரக்*

- மெளலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி

தொடர்புடைய செய்திகள்

+ - reset