நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிகழாண்டில் 137 பாலஸ்தீனர்களும், 24 இஸ்ரேலியர்களும் கொலை

ஜெருசலேம்:

இஸ்ரேல் தாக்குதலில் நிகழாண்டில் இதுவரை 137 பாலஸ்தீனர்களும், பதில் தாக்குதலில் 24 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீது சனிக்கிழமை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீன ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக இஸ்ரேல் போலீஸார் கூறுகையில், "ஜெருசலேத்துக்கு வெளியே உள்ள இஸ்ரேலிய படையினரின்  குலாந்தியா சோதனைச் சாவடியில் சனிக்கிழமை காலை திடீரென நுழைந்த ஒருவர், "எம் 15' ரைஃபிள் மூலம் சுடத் தொடங்கினார்.

அவரை இஸ்ரேலிய போலீஸார் உடனடியாக சுட்டு வீழ்த்தினர். இதில் 2 பாதுகாப்பு வீரர்களுக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று தெரிவித்தனர்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காஸா பகுதிகளை மீட்கவும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளை அகற்றவும் பாலஸ்தீனத்தின் ஆயுதக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு கரைப் பகுதியான ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அண்மையில் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் அவ்வப்போது நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகவும், பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் பாலஸ்தீன பகுதிக்குள் நுழைந்து வீடுகளுக்கும், கார்களுக்கும் தீவைத்தும் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனர்களுக்கு நிகழாண்டு மோசமான தாக்குதல் ஆண்டாக கருதப்படுகிறது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset