நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியாவுக்குள் நுழைந்து பின்வாங்கியது வாக்னர் ஆயுதக் குழு

 மாஸ்கோ:

ரஷிய ராணுவத் தலைமைக்கு எதிராக, அந்த நாட்டின் தனியார் துணை ராணுவப் படையான வாக்னர் ஆயுதக் குழு தொடங்கியது.

மாஸ்கோவை நோக்கி நகர்ந்த அந்தக் குழுவினருக்கு ரஷிய அதிபர் புதின் அளித்த எச்சரிக்கையையடுத்து அந்தப் படையினர் பின்னர் ரத்தக் களறி ஏற்படும் என்று நகர்வை கைவிட்டனர்.

அதிபர் புதினின் படை என்று கூறப்பட்டு வந்த அந்தப் படை, இதுவரை ரஷியாவுக்காக பல்வேறு நாடுகளில் போரிட்டு வந்தது. அண்மைக் கால உக்ரைன் போரில் ராணுவ உயரதிகாரிகள் தவறான முடிவுகளை எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி வந்த வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின், அவர்களுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை அறிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வந்த தங்களது படையினர் தங்கியிருந்த முகாம் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்ததாகவும் வெளியிட்ட விடியோ அறிக்கையில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

நாட்டு மக்களிடையே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது, ரஷிய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் குழு மேற்கொண்டுள்ள ஆயுதக் கிளர்ச்சி தேசத் துரோகச் செயலாகும்.

இந்த நடவடிக்கை மூலம் ரஷியாவின் முதுகில் அந்தப் படை குத்தியுள்ளது. இந்தக் கிளர்ச்சியில் ஈடுபடும் எந்தவொரு நபரும் தண்டிக்கப்படுவார்.

ரஷியாவை பாதுகாப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று எச்சரித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset