நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்த அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்:

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அண்மையில் சீனா சென்று திரும்பிய நிலையில், ஜின்பிங்கை பைடன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டின் தற்போதைய அதிபர் பைடன், அண்மையில் அங்குள்ள கலிஃபோர்னியா பகுதியில் தேர்தலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் செல்வந்த நன்கொடையாளர்களுக்கு மத்தியில் பைடன் பேசுகையில், "அமெரிக்காவில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதால், சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிருப்தி அடைந்தார். அந்த பலூன் அமெரிக்காவில் இருந்த ஜின்பிங்குக்கு தெரியாததால் அவர் அதிருப்தி அடைந்தார்.

நடந்தது என்னவென்றே தெரியாதபோது இதுபோன்ற சம்பவங்கள் சர்வாதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றார்.

பைடனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டும் பைடனின் பேச்சு சீனாவின் அரசியல் கண்ணியத்தை கடுமையாக தகர்க்கிறது. அவரின் கருத்துகள் நியாயமற்றது; பொறுப்பற்றது என்று தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset