நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புனித ஹஜ் பெருநாளையொட்டி இதுவரை 1.5 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி அரேபியா வந்தடைந்துள்ளனர்

ரியாத்: 

ஹஜ் புனித யாத்திரைக்காக உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் இதுவரை வந்துள்ளதாக அந்நாட்டின் செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

1,499,472 யாத்ரீகர்களில், மொத்தம் 1,435,014 யாத்ரீகர்கள் விமானம் மூலமாகவும், 59,744 யாத்ரீகர்கள் தரை வழியாகவும், 4,714 பேர் கடல் வழியாகவும் வந்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.6 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ் செய்கிறார்கள்.

இருப்பினும், COVID-19 தொற்றுநோய் உலகைத் தாக்கியபோது அந்த எண்ணிக்கை மாறியது, சவுதி அரேபிய அரசாங்கம் யாத்ரீகர்கள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த ஆண்டு பழையபடி சவுதி அரேபியாவின் கதவுகள் புனிதப் பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளன புனித ஹஜ் கிரியைகளின் இறுதிப் பத்து நாட்கள் தொடங்கி உள்ளன.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset