நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் மரணம்

வாஷிங்டன்: 

அட்லாண்டிக் பெருங்கடல் தளத்தில் டைட்டானிக் விபத்துக்குள்ளான இடத்திற்கு ஐந்து பயணிகளை ஏற்றிச் சென்ற டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் பயங்கர பேரழிவில் வெடித்து சிதறியதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்தது. 

இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த  ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐந்து நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்தது என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல், டைட்டானிக் அருகே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுவதாகவும், சோகத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டைட்டானிக் அருகே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, OCEANGATE EXPEDITIONS நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதன் பயணம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பை இழந்தது .

இதனால் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. 

இந்த நீர்மூழ்கி கப்பலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும் வர்த்தகர் ஷாஸடா டாவூட் (வயது 48), அவரின் மகன் சுலேமான் (வயது 19), பிரிட்டன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் ( வயது 58), போல் ஹென்ரி (வயது 77)  மற்றும் ஸ்டோக்டன் ருஷ் ஆகீயோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset