நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

பெய்ஜிங்:

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்குப் பிறகு சீனாவுக்கு உயர்நிலை அமைச்சர் ஒருவர் சென்றுள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சீனா வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பற்றிய தவறான புரிதல்கள் காரணமாக அமெரிக்கா மோசமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக அந்த அறிக்கையில் அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது.

இணக்கமான பேச்சுவார்த்தைகளைத் தொடர இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். எனினும், கருத்து வேறுபாடுகள் நிலவும் விவரங்களில் தங்களது கடுமையான நிலைப்பாட்டை தளர்த்தாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் தோற்றத்துக்கு சீனாதான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. அண்மையில் அமெரிக்காவில் வேவு பார்க்கும் பலூன்களை சீனா பறக்கவிட்டதாகவும் அதை ஏவுகணை வீசி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset