நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரணம்: ரஷியா தடுப்பதாக ஐ.நா. குற்றச்சாட்டு

கீவ்:

உக்ரைனில் அணை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ரஷியா அனுமதி மறுப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா. நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் டெனைஸ் பிரவுன்  தெரிவிக்கையில், நோவா ககோவா அணை உடைப்பால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்காக உக்ரைன் மற்றும் ரஷிய அரசுகளை தனித்தனியாக அணுகினோம். ஆனால், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல எங்களுக்கு ரஷிய அரசு அனுமதி மறுத்துவிட்டது என்றார்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் அண்மையில் எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது. இந்த நிலையில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவா நகரில் நீப்ரோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை கடந்த மாதம் 28 தேதி தகர்க்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset