நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமீரக அடையாள அட்டையை தொலைத்தால் 1000 திர்ஹம் அபராதம் 

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம், துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிர்வாக அபராதங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் எமிரேட்ஸ் அடையாள அட்டை - ஐடி தொடர்பான அபராதங்கள், ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர்களின் விவகாரங்கள் தொடர்பான சேவைகள் அடங்கும்.

பதிவு மற்றும் ஐடி கார்டு வழங்குவதில் தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளுக்கும் 20 திர்ஹம் என்னும் அடிப்படையில் அதிகபட்சம் 1,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அடையாள அட்டை(ஐடி)யின் காலாவதி தேதியில் இருந்து 30 நாட்களுக்குப் பிறகு புதுப்பிப்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 20 திர்ஹம் முதல் அதிகபட்சமாக 1,000 திர்ஹம் வரை விதிக்கப்படும்.

எமிரேட்ஸ் அடையாள அட்டை(ஐடி)க்கான சேவையைப் பெறும் நபர் தவறான தரவுகளை வழங்கினால் – 3,000 திர்ஹம் அபராதம்.

கணினி பயனர்களால் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பத்தை தவறாக டைப்பிங் செய்ததற்கு- 100 திர்ஹம் அபராதம்.

ஊழியர்களின் வேலையைத் தடுப்பது அல்லது அவர்களுடன் ஒத்துழைக்கத் தவறுவது போன்ற செயல்களுக்கு – 5,000 திர்ஹம் அபராதம்.

ஆதாரம்: Khaleej Times

தொடர்புடைய செய்திகள்

+ - reset