நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தஞ்சோங் பகாரில் கட்டடம் இடிந்து விழுந்தது - தொழிலாளர் காணவில்லை 

சிங்கப்பூர்: 

தஞ்சோங் பகாரில் வேலைத் தளமொன்றில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் இருந்த ஓர் ஊழியரைக் காணவில்லை.

எண். 1, பெர்னாம் ஸ்ட்ரீட்டில் (1 Bernam Street) பிற்பகல் சுமார் 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

அங்கு கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

காணாமற்போன ஊழியரைக் கண்டுபிடிக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. பேரிடர் உதவி, மீட்புக் குழுப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கிடையில் அவர் சிக்கி இருக்கிறாரா என்று தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. 

குடிமைத் தற்காப்புப் படையின் 2 மோப்ப நாய்களும் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வேலைத் தளத்துக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் கட்டுமான இடிபாடுகள் விழுந்துகிடப்பதை CNA-வுக்கு அனுப்பப்பட்ட காணொலியில் பார்க்க முடிந்தது.

அந்தப் பகுதியில் ஒரு சாலை மூடப்பட்டது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த பல வாகனங்கள் அங்கு விரைந்தன.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset