நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 79 பேர் பலி

காலாமாடா:

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 79 பேர் பலியாகினர்.
மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்கு சென்ற  அந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் படகில்  மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

அது மிகவும் ஆழமான கடல் பகுதி என்பதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.

விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 104 பேர் அங்கிருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். இது தவிர, விபத்துக்குப் பிறகு மாயமாகியுள்ள ஏராளமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற விரும்பும் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டு, அந்தப் படகு கிழக்கு லிபியாவின் டோப்ரக் நகரிலிருந்து புறப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset