நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உணர்வுகளால் உந்தப்பட்டே மனிதன் எதனையும் செய்யத் துணிகின்றான். உணர்வுகளின் இழுப்புகளுக்கும் அவை தருகின்ற அழுத்தங்களுக்கும் அவன் எளிதாக வளைந்து கொடுக்கின்றான். உணர்வுகளால் வழிநடத்தப்படுவதாகத்தான் மனித வாழ்வு அமைந்திருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் ஒருவர் எடுக்கின்ற முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கும் அடிப்படை உந்துதல்களாக இருப்பவை அவருடைய உணர்வுகளும் அவருடைய மனத்தின் விருப்பு வெறுப்புகளும்தாம். இஸ்லாத்தின் தனித்தன்மையே, தனிச் சிறப்பே அது முன் வைக்கின்ற சிந்தனைகளும் கோட்பாடுகளும் மனித உணர்வுகளோடு மிகவும் இயைந்து போகின்றவையாய், உணர்வுகளோடு ஒத்துப் போகின்றவையாய் இருப்பதுதாம். 

எந்தவொரு சிந்தனையும் உணர்வின் வடிவத்தை மேற்கொள்ளாத வரையில் அது நம்பத்தகுந்ததாய் ஆகாது. இதனால்தான் ஒரு அழைப்பாளர் மனிதனின் Intellect அறிவுத்திறனை விட அவனுடைய Emotions உணர்வுகளைத்தான் இலக்காக்குகின்றார். 

பொதுவாக மனிதனின் மூளையின் வாயில்கள் அனைத்திலும் வாயிற் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இதயத்தின் வாயில்களில் எந்தக் கண்காணிப்பாளரும் இருப்பதில்லை. இதயத்தின் வாசல் வழியாக சத்தியத்தின் அழைப்பு எந்தவொரு மனிதர் வரையிலும் எளிதாகச் சென்று அடைந்துவிடும். 

ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் இதய வாசல் வரை சென்று சேர்கின்ற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்க வேண்டும். உணர்வுகள் காயப்படுவதை எந்தவொரு மனிதராலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

இன்னும் சொல்லப் போனால் ‘நீர் கடுகடுப்பானவராகவும் வந்னெஞ்சம் கொண்டவராகவும் இருந்திருப்பீரேயானால் உம்மைச் சுற்றிலும் இருக்கின்ற இந்த மனிதர்கள் அனைவரும் உம்மை விட்டு விலகிச் சென்று விட்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தனிப் பெருங் கிருபையினால்தான் நீர் மென்மையான உள்ளம் கொண்டவராக இருக்கின்றீர்’ என்று நபிகளாரை விளித்தே சொல்லப்பட்டது: 

(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையானவராக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள்.
(அத்தியாயம் 3 ஆலு இம்ரான் 159)

அதாவது உம்முடைய உயர்வான, சிறப்பான, அறிவார்ந்த போதனைகளையும் மீறி மக்கள் உம்மோடு பினைந்து இருந்திருக்க மாட்டார்கள்.

மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனுசரித்து, அரவணைத்து நடக்காத வரையில் அவர்கள் எந்தவொன்றிலும் நீண்டக்காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. 

‘நான் பதினைந்து, பதினாறு ஆண்டுகள் வரை தொடர்ந்து இடைவிடாமல் மக்களின் சிந்தனையையும் அறிவுத் திறனையும் இலக்காக்கியே அழைப்பு விடுத்து வந்தேன்.

ஆனால் எந்தவொரு Response  பதிலும் கிடைக்கவில்லை. அதன் பிறகு மக்களின்  Emotions உணர்வுகளைக் குறி வைத்து அழைப்பு விடுத்தேன்.

சில ஆண்டுகளுக்குள்ளாக என்னைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சமாக உயர்ந்து விட்டது’ என்று ஒருவர் கூறியிருக்கின்றார். 

மார்க்க விஷயத்தில் மனிர்களின் உணர்வுகளையும் அவர்களின் மனநிலையையும் மனோபாவத்தையும் கருத்தில் கொண்டே எதனையும் போதிக்க வேண்டும்.

நபிகளார்(ஸல்) வெற்றிக்கான இந்த இரகசியத்தை நல்ல முறையில் அறிந்திருந்தார்கள். 

ஸகீஃப் கோத்திரத்தாரைச் சேர்ந்தவர்கள் நபிகளாரைச் சந்திப்பதற்காக வந்தபோது முகீரா பின் ஷீபா(ரலி) நபிகளாரிடம் கூறினார்:

‘இந்த மக்கள் (ஸகீஃப் கோத்திரத்தாரைச் சேர்ந்தவர்கள) என்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நான் அவர்களை என்னுடைய இடத்தில் தங்க வைத்துக் கொள்ளட்டுமா? அவர்களுக்கு உபசரிக்கட்டுமா?’

நபிளார்(ஸல்) கூறினார்கள்: ‘உம்முடைய கோத்திரத்தாரைக் கண்ணியம் செய்வதை விட்டு நான் உம்மைத் தடுக்க மாட்டேன். அதே சமயம் குர்ஆன் ஓதப்படுவது அவர்களின் காதுகளில் விழுகின்ற இடத்தில் அவர்களைத் தங்க வையுங்கள்’.

- மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான்

தொடர்புடைய செய்திகள்

+ - reset