நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறான காணொலிகளை வெளியிட்ட காமெடி கிளப் நடிகரின் கணவருக்கு 16 ஆயிரம் ரிங்கிட்  அபராதம்

கோலாலம்பூர்: 

சமூக வலைத்தளத்தில் அவதூறு காணொலிகளை வெயிட்டதன் தொடர்பில் காமெடி கிளப் நடிகரின் கணவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 16ஆயிரம் ரிங்கிட் அபராதம்  விதித்து தீர்ப்பளித்தது. 

இன்ஸ்டாகிராம்,  யூட்யூப் வாயிலாக காணொலிகளை வெளியிட்டதன் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும்  எதிராக அவர் செயல்பட்டதாக கூறி குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டு அவருக்கு எதிராக 46 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. 

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக கையாண்டதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை நீதிபதி அஸ்ருல் டருஸ் வழங்கினார். 

காணொலிகளைப் பதிவிட்ட குற்றத்திற்காக அவர் மீது 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233(1)யின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset