நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இந்தியன் 2 திரைப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா

சென்னை: 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் தற்போது இந்த படம் தொடர்பான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முதன்மையான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் நடிகர் எஸ்.ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்குநர் ஷங்கரின் GAME CHANGER திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset