நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது 

டக்கர்:  

27 மாணவிகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததாக  சந்தேகிக்கப்படும் செனெகல் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பல வாரங்களுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தை அவர் தௌபா எனும் இடத்தில் நிகழ்ந்திருந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவானார். 

இந்நிலையில்,  போலீசாரிடம் அந்த ஆசிரியர் சரணடைந்த வேளையில் திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.  மேலும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

பாலியல் பலாத்காரம் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset