நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரம்பு மீறிய பயணிகள்: இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்குக் குவியும் ஆதரவு

கோலாலம்பூர்:

வரம்பு மீறி பயணிகள் நடந்துகொண்ட விவகாரத்தில் இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

நால்வருக்கு மட்டுமே இருக்கைகள் கொண்டு இ-ஹைலிங் வாகனத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் இடத்திற்கு சென்ற போது ஆறு பேர் காரில் ஏறியுள்ளனர்.

காரில் ஏற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் காரில் ஏறியதால் இ-ஹைலிங் ஓட்டுநர் அதிருப்தியடைந்தார்.

பல்கலைக்கழக மாணவர்களான அவர்களின் பதிவை ரத்து செய்த இ-ஹைலிங் ஓட்டுநர் அவர்களை காரில் விட்டு இறங்க சொல்லினார்.

இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி உள்ளது.

இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கையை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset