நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் தொழிலாளர்களின் நெருக்கடியை தீர்க்க சம்பளத்தை உயர்த்துவதே சிறந்த வழி: மனிதவள அமைச்சர் சிவக்குமார்

பினாங்கு:

கோவிட்-19 தொற்று நோயின் மோசமான விளைவுகளிலிருந்து மலேசியா படிப்படியாக விடுப்பட்டு வரும் நிலையில், நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஊதியத்தை உயர்த்துவதே மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

இப்போது கிட்டத்தட்ட முழு வேலை வாய்ப்பை பதிவு செய்திருந்தாலும், தற்போதைய வேலையின்மை விகிதம் 3.5% ஆக இருப்பதால், நாடு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளான உற்பத்தி, தோட்டங்கள், சேவை துறைகளில் 
தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

நாட்டில் தற்போது 800,000 வேலைகள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது

உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமான 1,500 வெள்ளி சம்பளத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊதியத்தை உயர்த்துவதுதான் சிறந்த் வழிமுறை என்ற கருத்தை  மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்கிறது

மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, இப்போது 18 லட்சம் ஆற்றல் மிக்க மலேசியர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள்,.

அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ளனர்.

அவர்களைத் திரும்பப் பெற, தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடலில் புதுமையானதாக இருக்கும் என்று முதலாளிகளை மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இரு தினங்களுக்கு பினாங்கு பட்டர்வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி மையம் வேலை தேடும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset