நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19இல் கலைக்கப்படும்: அஸ்மின் அலி

தஞ்சோங் காராங்:

சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

கடந்த தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட சிலாங்கூர் சட்டமன்றம் காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது.

ஆகவே சட்டமன்றம் கலைக்கப்படுகிறது என மந்திரி புசார் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.

அதே வேளையில் சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படுகிறது என நானே அறிவிக்கிறேன்.

வரும் ஆகஸ்ட் மத்தியில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் மக்களின் முழு ஆதரவை பெற்று தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று அஸ்மின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset