நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேடையில் கால் தடுக்கிக் கீழே விழுந்த  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஆகாயப் படை கழகத்தில் மேடையில் கால் தடுக்கிக் கீழே விழுந்துள்ளார்.

கழகத்தின் பட்டதாரிகளுக்கு உரையாற்றிய பின்னர், தமது இருக்கைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் 80 வயது திரு பைடன் விழுந்தார்.

ஆகாயப் படை வீரர் ஒருவர் அவரைத் தூக்கிவிட்டார்.

மேடையில் இருந்த சிறிய மணல் மூட்டை அவரைத் தடுக்கிடச் செய்ததாக வெள்ளை மாளிகையின் தொடர்பு இயக்குநர் தமது டுவிட்டர்  பக்கத்தில் குறிப்பிட்டார்.

பைடன் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அமெரிக்க வரலாற்றிலேயே திரு பைடனே ஆக வயதான அதிபர்.

அவர் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.
விளம்பரம்

அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதாகவும் அவரின் அதிகாரபூர்வ மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset