
செய்திகள் தொழில்நுட்பம்
சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
கேப் கனாவெரல்:
சவூதி அரேபியா, அமெரிக்கா விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.
இதில் இரு நாடுகளைச் சேர்ந்த தலா 4 வீரர்கள் இருந்தனர்.
சர்வசே விண்வெளி நிலையத்தில் 9 நாள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அவர்களுடன் புறப்பட்ட அந்த விண்கலம், 9 மணி நேரத்துக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி மெக்ஸிகா வளைகுடாவில் பாராசூட் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு இறங்கியது.
ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்ஸனுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் ஜான் ஷாஃப்னர், சவூதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கார்னி, வீராங்கனை ரயானா பர்னாவி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மே 22ஆம் தேதி சென்றிருந்தனர்.
இவர்களில் ரயானா பர்வானிதான் விண்வெளிக்குச் சென்ற சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
September 1, 2023, 3:55 pm
தொலைப்பேசி எண் இல்லாமல் வீடியோ & ஆடியோ அழைப்புகள் செய்யலாம் - எலான் மஸ்க் அறிவிப்பு
August 30, 2023, 11:43 pm
நிலவின் மேற்பரப்பில் SULPHUR சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிப்பு
August 26, 2023, 3:54 pm
நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
August 25, 2023, 3:31 pm
சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
August 23, 2023, 7:22 pm
சந்திரயான்-3 இன்னும் சிறிது நேரத்தில் தரை இறங்கும்: இஸ்ரோ
August 23, 2023, 11:10 am
X பயன்பாடு தோல்வியடையக்கூடும்: எலான் மாஸ்க்
August 19, 2023, 1:20 pm