நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷியா தலைநகர் மீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதல்

மாஸ்கோ: 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் முதல்முறையாக  தாக்குதல் நடத்தியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்குப் பிறகு தங்கள் எல்லைக்குள் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷியா கூறி வருகிறது.

அண்மையில், அதிபர் விளாதிமீர் புதினை படுகொலை செய்யும் நோக்கில் கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியா கூறியிருந்தது.

இந்த நிலையில், மாஸ்கோவில் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுடனும் உக்ரைனுக்குத் தொடர்புள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாஸ்கோ நகரின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவற்றில் 5 விமானங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.

மேலும் 3 விமானங்களின் மின்னணு சாதனங்கள் முடக்கப்பட்டு அவை திசைமாற்றப்பட்டன.

இது, உக்ரைன் அரசு நடத்தியுள்ள பயங்கரவாத தாக்குதலாகும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் பல கட்டடங்களில் லேசான சேதம் ஏற்பட்டதாகவும், 2 பேருக்கு லேசான காயமடைந்த 2 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும், இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களில் இருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ரஷியா கூறியுள்ளதை உக்ரைன் மறுத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset