நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

செங்கோல் மூலம் ஆட்சி பரிமாற்றம் நடைபெறவில்லை: மோசடி பொய்களை பாஜக பரப்புகிறது

புது டெல்லி:

செங்கோல் பரிமாற்றத்தின் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா ஆட்சி அதிகாரத்தைப் பெற்றதற்கான எந்தவித வரலாற்று ஆவணமும் இல்லை, இதை வைத்து பாஜக மோசடி பொய்களை வெளியிடுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதன் மூலம் தமிழகத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் முற்படுகிறார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை செங்கோல் பரிமாற்றம் மூலம் அப்போது பண்டித ஜவாஹர்லால் நேரு பெற்றதாகவும், தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த செங்கோல், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது மக்களவைத் தலைவரின் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், செங்கோல் மூலம் ஆட்சி அதிகார பரிமாற்றம் நடைபெற்றதாக லார்ட் மவுன்ட்பேட்டன், , ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி ஆகியோர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட எந்தவித வரலாற்று ஆவணங்களும் இல்லை.

இதுதொடர்பான பாஜகவின் அனைத்து முன்வைப்பும் மோசடிதான். தமிழகத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பாஜக இவ்வாறு கூறி வருகிறது.

நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் அலாகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. செங்கோல் தொடர்பாக 1947, டிசம்பர் 14ஆம் தேதி அவர் தெரிவித்த கருத்து பொதுவெளியில் உள்ளது.

அதை மறைத்து தற்போது சிலர் தங்களின் கருத்துகளைப் பரப்பிவிட்டு தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்துகின்றன. ராஜாஜியின் வரலாற்று ஆய்வாளர்களே இதுகுறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset