நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை லோரி மோதியது

மலாக்கா: 

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை லோரி மோதி தள்ளியது.இதனால் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் மலாக்கா பத்து தீகாவில் உள்ள கம்போங் பாயா மெங்குவாங்கில் நடந்தது.உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத நிலையில் லோரி ஒன்று மோதியது.

இந்த சம்பவத்தில் லோரியை ஓட்டி வந்த 37 வயதுடைய ஆடவர் அச்சிறுமியை பார்க்கவில்லை.அச்சிறுமி திடீரென சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

தலை, உடலில் கடுமையான காயங்களுக்கு இலக்கான் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அதே வேளையில் லோரி ஓட்டுநரின் ரத்தமும்சோதனைக்கு உட்படுத்தப்படுள்ளது என்று மத்திய மலாக்கா போலீஸ்படைத் தலைவர் கிறிஸ்டபர் பாதிட் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset