நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி மாணவர்களிடையே மோசமான கைகலப்பு: மாணவர்களைக் கைது செய்தது போலீஸ்

ஜொகூர் பாரு: 

பென்சிலையும் அழிப்பானையும் தூக்கி வீசிய காரணத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  படிவம் மூன்று மாணவர்களிடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவமானது பள்ளியின் முன் நிகழ்ந்தது. கைக்கலப்பில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களுக்கு கை, கால், தலையில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்புக்கு போலீஸ் புகார் ஒன்று கிடைக்கப்பெற்றது. பலத்த காயங்களுக்கு இலக்கான மாணவர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வட ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார். 

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இந்த கைக்கலப்புக்குக் காரணம்  என்று அவர் விளக்கம் அளித்தார். 

கைகலப்பு சம்பவத்தில்  தொடர்புடைய மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset