செய்திகள் விளையாட்டு
சாம்பியன் லீக் இடத்தை உறுதி செய்தது மென்செஸ்டர் யுனைடெட்
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீல் கால்பந்துப் போட்டிக்கான இடத்தை மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் உறுதி செய்துள்ளனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4 -1 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை காஷ்மிரோ, அந்தோனி மார்ஷியல், புருனோ பெர்னாண்டஸ், மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 72 புள்ளிகளுடன் பட்டியலிம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளர்.
அதே வேளையில் அடுத்த சீசனுக்கான சாம்பியன் லீக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
