நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல் வைக்கப்படுகிறது

புது டெல்லி:

இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் தமிழகத்தில் இருந்து விடுதலைப் பெற்ற போது அளிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலைக்கு பிறகு அதிகாரத்தை பரிமாற்றம் செய்யும் விதமாக பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செங்கோல் இதுவாகும்.

இந்தச் செங்கோல் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருந்த இந்தச் செங்கோல் தற்போது 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு நடைபெற்ற  செங்கோல் பாரம்பரியம் இந்தியாவின் அதிகார பரிமாற்றத்தின்போதும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset