
செய்திகள் கலைகள்
புக்கிட் ஜலில் அக்சியாத்தா அரங்கில் மீண்டும் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி
கோலாலம்பூர் :
பிரபலப் பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் தனது இசை நிகழ்ச்சியால் இரசிகர்களை மகிழ்விப்பதற்காக இம்முறையும் மலேசியா வரவுள்ளார். சித் ஸ்ரீராம் தன்னுடைய வசீகரக் குரலால் பல லட்சம் ரசிகர்களைக் கவர்ந்த ஈர்த்துள்ளார்.
சித் ஸ்ரீராமின் Heart & Soul 3.0 Live in KL 2023 என்ற இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7-ஆம் தேதி மாலை 7 மணிக்குப் புக்கிட் ஜலில் அக்சியாத்தா அரங்கில் நடைபெறவுள்ளது.
Woodmark Events நிறுவனத்தோடு இணைந்து சித் ஸ்ரீராம் நான்கவது முறையாக மலேசியாவில் இந்த இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக Woodmark Events நிறுவனம் நடத்தியச் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. அதிலும் குறிப்பாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்து இரண்டே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வயதில் கர்நாட்டிக் இசையைக் கற்கத் தொடங்கிய சித் ஸ்ரீராம் கடந்த 2013-ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் அடியே பாடலின் மூலம் பின்னனி பாடகராகத் திரையுலகில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானால் அறிமுகப்படுத்தப்பட்டார். தன்னுடைய தனித்துவமான குரலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகர் சித் ஸ்ரீராம் என்னடி மாயாவி, போ போ என், மறுவார்த்தைப் பேசாதே, கண்ணான கண்ணே, தீத்திரியாய் ஆனேன் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த இசைநிகழ்ச்சிக்கான தகவல்களை Woodmark Events, நம்பிக்கை ஆகியவற்றின் சமூக ஊடகங்களிலும் காணலாம்.
நுழைவுச் சீட்டுகளை இரசிகர்கள் மே மாதம் 29-ஆம் தேதி முதல் வாங்கலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 6:22 pm
நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார்
July 14, 2025, 1:09 pm
இந்திய திரையுலகின் பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm