நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய மகளிர் கபடி அணியில் இந்தியருக்கு இடமில்லையா?: இன பாகுபாடு இல்லை என கபடி சங்கம் விளக்கம்

கோலாலம்பூர்:

தேசிய மகளிர் கபடி அணியில் இந்தியருக்கு இடமில்லை என்ற விவகாரம் தற்போது நாட்டில் சர்ச்சையாகி உள்ளது.

அனைத்துலக பொது கபடி சாம்பியன் போட்டி இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் மலேசியாவில் இருந்து ஆண், பெண் இரு அணிகள் களமிறங்கவுள்ளன.

இதில் ஆண்கள் அணியில் முழுமையாக இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே வேளையில் மகளிர் அணியில் முழுமையாக மலாய்க்காரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் அணியின் இந்தியர்கள் இல்லாதது தற்போது சமுக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கபடி அணியில் கூட இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய கபடி சங்கத்தின் தலைமை செயலாளர் தலைமை செயலாளர் பீட்டர் விளக்கம் தந்தார்.

May be an image of 12 people and people standing

சுக்மா விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுவது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.

சுக்மாவில் கபடியை இடம் பெற வைக்க வேண்டும் என அனைவரும் போராடி வருகிறோம். இந்த நிலையில் அடுத்தாண்டு சுக்மா விளையாட்டுப் போட்டி சரவாக்கில் நடைபெறவுள்ளது.

இதில் எப்படியாவது கபடியை இடம் பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில்  சரவா அணிக்கு மலேசியாவை பிரதிநிதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மலேசிய கபடி சங்கத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டை பிரதிநிதிக்கும் வாய்ப்பு சரவா அணிக்கு வாய்ப்பு வழங்குவதால் சுக்மா போட்டியில் கபடி இடம் பிடிக்கும் என்பது தான் எங்களின் நம்பிக்கை. இதில் எந்த இனபாகுபாடும் இல்லை என்று பீட்டர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset