நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்

கோலாலம்பூர்:

பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை. அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இதனை கூறினார்.

மலேசிய கால்பந்து சங்கம், ஏழு ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து எப்ஏஎம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த  மேல்முறையீட்டை பிபா எனும் அனைத்துலக கால்பந்து சங்கம் நிராகரித்துள்ளது.

பிபாவின் இந்த நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை. அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது.

மேலும் சட்டத்தின் உண்மையான விதிகளைப் பயன்படுத்தாமல் வீரர்களை பிபா தொடர்ந்து தண்டித்து வருகிறது.

பிபா குறியீட்டின் பிரிவு 22, போலி ஆவணங்களை உருவாக்குபவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் மட்டுமே வழக்குத் தொடர முடியும்.

இது வீரர்களுக்குப் பொருந்தாது என்றும் கூறுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விதிக்கப்பட்ட இந்த தண்டனை சட்டத்தின் அடிப்படையில் இல்லை.

உண்மையான காரணத்தைவிட அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டதாகத் தெரிகிறது.

சிலர் விரல்களை நீட்ட விரும்புகிறார்கள். சிலர் சத்தம் போட விரும்புகிறார்கள்.

ஆனால் வீரர்களுக்கான முழுமையான போராட்டத்தை நான் எழுந்து ஆதரிக்கத் தேர்வு செய்கிறேன்.

இது இப்போது ஒரு சுயாதீன அமைப்பான விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் வரை செல்லும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset