நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி

பெட்டாலிங் ஜெயா:

பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் இடைக்கால தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மஹாடி இதனை கூறினார்.

7 மலேசிய ரத்த உறவு தொடர்புள்ள வீரர்கள், மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக பிபா தண்டனை விதித்துள்ளது.

இத்தண்டனையை எதிர்த்து மலேசிய கால்பந்து சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

இம்மேல்முறையீட்டை நிராகரிக்கும் பிபா மேல்முறையீட்டுக் குழுவின் முடிவால் எப்ஏஎம் அமைப்பின் வழக்கறிஞர்களும் நிர்வாகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அடுத்த கட்டத்தை எடுப்பதற்கு முன், முழு விவரங்களையும், முடிவிற்கான எழுத்துப்பூர்வ காரணங்களையும் பெற மலேசிய கால்பந்து சங்கம் பிபாவுக்கு கடிதம் எழுதும்.

எங்கள் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிபாவிடமிருந்து எப்ஏஎம் மேல்முறையீட்டு முடிவைப் பெற்றுள்ளத  என்று முஹம்மத் யூசோப் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset