நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது

கோலாலம்பூர்:

அனைத்துலக கே கார் பந்தயத்தில் நாட்டில் புகழ் பெற்ற Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது.

Antera Motor Sports அணியின் நிர்வாகி எஸ். ஹிமலன் கூறினார்.

24 மணி நேர அனைத்துலக கே கார் பந்தயம் வரும் நவம்பர் 22, 23ஆம் தேதிகளில் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறவுள்ளது.

இப்பந்தயத்தில் மலேசியா உட்பட 10 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், தென் கொரியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெறவுள்ளன.

இதில் ஒரே மலேசிய தமிழர் அணியாக Antera Motor Sports களமிறங்கவுள்ளது.

Antera Motor Sports அணியின் தலைவர் தமிழரசன் தலைமையில் இப்போட்டியில் அணி களமிறங்கவுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் களமிறங்கிய அனுபவத்தை Antera Motor Sports அணி கொண்டுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்ட கார், தரமான இன்ஜின் என புதிய பரிணாமத்துடன் Antera Motor Sports அணி இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

குறிப்பாக Antera Motor Sports அணியின் இம்முயற்சிக்கு பல நல்லுள்ளங்கள் நிதி உட்பட பல உதவிகளை வழங்கியுள்ளனர்.

இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இப்போட்டிக்கு இந்திய மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.

இப்போட்டியை காண வருவதுடன் Antera Motor Sports அணிக்கு முழு ஆதரவை தர வேண்டும்.

மக்கள் இலவசமாக இப்போட்டியை காணலாம் என்று ஹிமலன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset