நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக பூப்பந்து தரவரிசையில் பியெர்லி தான் - தீனா முதலிடம்

கோலாலம்பூர்:

உலக பூப்பந்து தரவரிசையில் தேசிய இரட்டையர் ஜோடியான பியெர்லி தான் - தீனா முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய மகளிர் இரட்டையர் ஜோடியான பியெர்லி தான், எம்.  தீனா இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள் உலக பூப்பந்து தரவரிசையில் சீன ஜோடியான லியு ஷெங் ஷு-டான் நிங்கிடமிருந்து முதலிடத்தைப் பிடித்தனர்.

இந்த ஜோடி இப்போது 104,860 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சீன ஜோடி பிரான்ஸ், ஹைலோ போட்டியை தவறவிட்ட பிறகு 103,150 புள்ளிகளைப் பெற்ற ஷெங் ஷு-டான் நிங்கை முந்தியுள்ளது.

வரும் டிசம்பர் 17 முதல் 21 வரை ஹாங்சோவில் நடைபெறும் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் எட்டு ஜோடிகளை உலக தரவரிசைகள் தீர்மானிக்கின்றன.

இதனால் பியெர்லி-தீனா ஜோடி முதலிடத்தைப் பிடித்துள்ள சீன ஜோடிக்குப் பின்னால் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset