
செய்திகள் இந்தியா
பிரிஸ்பேன் நகரில் துணைத் தூதரகம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் துணைத் தூதரகம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு வாழும் இந்திய சமூகத்தினரை சிட்னி நகரில் உள்ள கூடோஸ் பாங்க் உள்ளரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் 21,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சார்ட்டட் பிளைட் மூலம் பலர் சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் வந்திருந்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், .
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கிரிக்கெட் நல்லுறவு 75 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் இரு நாட்டு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும், மைதானத்துக்கு வெளியே இரு அணி வீரர்களும் மிகுந்த நட்பைப் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மறைந்தபோது, கோடிக்கணக்கான இந்தியர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் இருநாட்டு வர்த்தக மதிப்பு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருள்கள் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இருநாட்டு அரசுகள் செயல்பட்டு வருகின்றன.
இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்.
இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 7:06 pm
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
June 6, 2023, 11:29 am
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 பேர் பலி
June 5, 2023, 2:35 am
கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது
June 3, 2023, 9:03 am
கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக் கொண்டன: 207 பேர் உயிரிழப்பு
June 2, 2023, 7:05 pm
மணிப்பூர் கலவர விசாரணை நடத்த நீதிக் குழு
June 2, 2023, 12:02 am
கடவுளுக்கே உபதேசம் கூறுவார் மோடி: ராகுல் விமர்சனம்
June 1, 2023, 11:53 pm
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
June 1, 2023, 4:37 pm
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
June 1, 2023, 1:18 am