
செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
புது டெல்லி:
மே 28ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
1927ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இடப் பற்றாக்குறை உள்ளதால் புதிய நாடாளுமன்றம் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது.
இதன்படி, 2020 இல் அடிக்கல் நாட்டப்பட்ட இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து மே 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்றும் ஹிந்து தேசியவாதி வி.டி.சாவர்க்கரின் பிறந்த தினமான மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்க போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முறையாகப் பெற்றதும், புறக்கணிப்பு அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவோம் என 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am