
செய்திகள் உலகம்
அமெரிக்க அதிபரைக் கொல்ல முயற்சி: அமெரிக்க இந்திய ஆடவரை போலிஸ் சுட்டுக் கொன்றது
வாஷிங்டன் :
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அது ஒரு கொலை முயற்சி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, லபாயெட் சதுக்கப் பகுதியிலுள்ள சாலையையும் நடைப்பாதையையும் அதிகாரிகள் மூடினர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார்.
விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் இந்திய வம்சாவளியான மிசோரி, செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அந்த நபர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், மோட்டார் வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் இயக்குதல், அமெரிக்க அதிபர், துணைத் அதிபர், குடும்ப உறுப்பினர் மீது கொலை மிரட்டல் அல்லது கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல், அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: WashingtonTimes
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm