நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விண்ணில் கால்பதித்த சவூதி அரேபிய வீரர்கள்

கேப் கனாவெரல்:

சவூதி அரேபியர்கள், அமெரிக்கர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்ஸனுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் ஜான் ஷாஃப்னர், சவூதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கார்னி, வீராங்கனை ரயானா பர்னாவி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர்.

இவர்களில் ரயானா பர்வானிதான் விண்வெளிக்குச் செல்லும் சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 10 நாள்கள் இருந்துவிட்டு அவர்கள் பூமி திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset