நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு வணிக குழுவை மீண்டும் அனுப்பிய நாசா

வாஷிங்டன் :

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளிக்குப் பல செயற்கை கோள்களைச் செலுத்தி வருகின்றது. அதன் கிளை நிறுவனமான புளோரிடா நகரில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தற்போது வணிகக் குழுவை அனுப்பியுள்ளது. 

ஆக்சியம் ஸ்பேஸ்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்த வணிகக் குழு கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆக்சியம் ஸ்பேஸ்-1 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset