நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு கோவிட்-19 தொற்று: தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்க்க மாட்டார்

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தான் கோவிட்-19 சுயப்பரிசோதனை  செய்ததாகவும் அதன் மூலம் தனக்குக் கோவிட்-19 தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக லீ இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

71 வயதான சியென் லூங், கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன், கென்யா,  நைரோபி ஆகிய நகரங்களுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

தான் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் நோய் எதிர்ப்பு மருந்தும் கொண்டுக்கப்பட்டுள்ளதாகவும் 
அவர் தெரிவித்திருந்தார்.

இன்று இரவு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிங்கப்பூர் வருகை தருகிறார். அவரது பயணத்தில் ஓர் அங்கமாக சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கும் நிகழ்வும் இருந்தது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset