
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையிலிருந்து இலங்கைக்கு ஜூன் 5 முதல் பயணியர் கப்பல் இயங்கும்
சென்னை:
சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு, ஜூன் 5 முதல், சுற்றுலா பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு செல்ல, சுற்றுலா கப்பல்கள் இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க, 'கார்டிலியா' என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின், 'எம்ப்ரஸ்' என்ற பயணியர் கப்பல், சென்னையில் இருந்து ஜூன் 5ம் தேதி முதல், இலங்கைக்கு இயக்கப்படுகிறது.
இந்த கப்பல், அம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உள்ளது. மூன்று நாள் 'பேக்கேஜில்' பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம்.
சென்னையில் இருந்து 24 மணி நேரத்திற்குள், இந்த கப்பல் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்கு சென்று சேரும்.
சென்னை துறைமுகத்தில் 7ஆவது நுழைவாயில் வழியாக, பயணியர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்தக் கப்பலில், ஒரே நேரத்தில் 1,600 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், சென்னையில் இருந்து கொச்சி, மும்பைக்கும், பயணியர் கப்பல்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm