நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலின் கொடி அணிவகுப்பு: 2 ஆயிரம் போலீஸார் குவிப்பு

காஸா சிட்டி:

மேற்கு ஆசியப் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இஸ்ரேலியர்கள் நடத்தும் சர்ச்சைக்குரிய கொடி அணிவகுப்பை பாலஸ்தீனர்கள் இடையூறு செய்வதைத் தடுப்பதற்காக பழைய ஜெருசலேம் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரை இஸ்ரேல் அரசு குவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

1967 நடைபெற்ற மேற்கு ஆசியப் போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல் படை, பழைய நகரம் மற்றும் அதன் புனிதத் தலங்கள் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியது.

அதனைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலியர்கள் ஒவ்வோர் ஆண்டின் மே மாதத்திலும் "ஜெருசலேம் நாள்' அணிவகுப்பை நடத்தி வருகின்றனர்.

Israel deploys heavy police presence ahead of contentious Jerusalem march –  Press Enterprise

இந்த கொடி ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துமாறு பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்தது. அந்தப் பகுதியில் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்கெனவே நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.

இந்த நிலையில், ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதியில்  குவிக்கப்பட்டனர். அவர்களுக்கும், அங்கு வந்த சில பாலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset