நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏன் பக்கவாதம் ஏற்படுகிறது?

வாஷிங்டன் :

நீரிழிவு நோயாளிகளுக்குப் பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் உள்ள இரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, இரத்த நாளங்கள் பாதிப்படைகின்றது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், பாதிப்படைந்த இரத்த நாளங்களில், தமனிக்குழாய் தடிப்பு ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைத்துப் பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.

பெரும்பாலும், நீரிழிவு நோயாளிகளுக்குக் கூடுதலாக இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, இரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.

ஆதாரம்:www.stroke.org.uk

தொடர்புடைய செய்திகள்

+ - reset