நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியரை  துரத்திய புகைப்பட கலைஞர்களால் பரபரப்பு

லண்டன்:

பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் தம்பதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி, மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக இளவரசர் ஹாரி,  மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். 

சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் அரை டஜன் கார்கள் சேசிங்கில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதே போன்று 1997 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஹாரியன் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset