நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய உணவைப் புகழ்ந்த எலான் மஸ்க்

நியூ யார்க் :

பாரம்பரியமிக்க இந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. அவ்வகையில் வட இந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒன்றான 'நான்' மற்றும் பட்டர் சிக்கன் அதிகமானோரால் விரும்பப்படுகிறது. இந்நிலையில் பட்டர் சிக்கன் குறித்து எலான் மஸ்க் செய்துள்ள 'டிவிட்' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கை டிவிட்டரில் சுமார் 14 கோடி பேர் பின் தொடர்கின்றனர் ஆனால் எலான் மஸ்க் பாலோ செய்யும் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மீம்ஸ்களைப் பகிர்வது, பிரபலங்களைக் கிண்டல் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

சமீபத்தில் டேனியல், பட்டர் சிக்கன் நான் உணவை சாப்பிட்டுள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்து போகவே தனது டிவிட்டர் பக்கத்தில் பட்டர் சிக்கன் நான் படத்தை பகிர்ந்து, நான் இந்திய உணவை மிகவும் விரும்புகிறேன். அவை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். 

அவரது இந்தப் பதிவை எலான் மஸ்க் பார்த்து அவரின் பதிவு உண்மை என்று பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் எலான் மஸ்குக்குப் பட்டர் சிக்கன் நான் பிடிக்குமா? என்று டிவிட்டரில் விவாதத்தை தொடங்கி விட்டனர். ஒரு சில பயனர்கள் எலான் மஸ்க் பட்டர் சிக்கன் சாப்பிடுவது போன்றும், சமைப்பது போன்று புகைப்படங்களை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

ஆதாரம்: Times of India

தொடர்புடைய செய்திகள்

+ - reset