நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செயற்கை இனிப்பூட்டிகளால் எந்தப் பயனுமில்லை: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா : 

உலகம் முழுவதும் உடல் எடை அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவற்றால் பலர் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். 

குறிப்பாகச், சிறு வயதிலேயே பலருக்கு உடல் பருமன் பாதிப்பு காணப்படுகிறது. இந்தச் சூழலில், குழந்தைகளின் உடலில் கொழுப்பை குறைப்பதற்காக, செயற்கை இனிப்பூட்டிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. 

இஃது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் இதனால், தொற்றில்லா வியாதிகளின் ஆபத்து குறையும் என்றும் கூறப்படுகிறது. 

பொதுவான சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகளாக ஏஸ்சல்பேம், அஸ்பர்டாமே, அட்வான்டாமே, சைக்ளமேட்ஸ், நியோடாமே, சாக்கரின், சுக்ரலோஸ், ஸ்டீவியா, ஸ்டீவியா உபப்பொருட்கள் ஆகியன உள்ளன.

தற்போது செயற்கை இனிப்பூட்டிகள் பயன்பாட்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தச் சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகள், முதியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு உடல் கொழுப்பு குறைப்பில் எந்தவித நீண்ட காலப் பலனையும் அளிக்காது எனத் தெரிவிக்கின்றது.

இது போன்ற சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும்போது, டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் முதியவர்களில் இறப்பு ஏற்படுவது போன்ற விரும்பத்தகாத சில ஆற்றல்மிக்க எதிர்விளைவுகள் ஏற்படக் கூடும் என்றும் இந்த ஆய்வின் முடிவு எச்சரிக்கை தெரிவிக்கின்றது.

சர்க்கரைக்குப் பதிலாக சர்க்கரை இல்லாத இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தும்போது, அது உடல் எடையை நீண்டகாலத்திற்கு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவாது என்று உலக சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்புக்கான இயக்குநர் பிரான்சிஸ்கோ பிராங்கா கூறினார். 

செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையில் சர்க்கரை கிடைக்க கூடிய உணவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பழம் அல்லது இனிப்பூட்டிச் சேர்க்கப்படாத உணவு மற்றும் குளிர்பானங்களை எடுத்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். 

இந்தச் செயற்கை இனிப்பூட்டிகள், அத்தியாவசிய உணவு காரணிகள் கிடையாது. ஊட்டச்சத்து மதிப்பும் அவற்றுக்குக் கிடையாது. உடல் சுகாதாரம் மேம்பட மக்கள் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, உணவில் தித்திப்பைக் குறைக்க வேண்டும் என அவர் கூறுகிறார். முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்தப் பரிந்துரைப் பொருந்தும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம்: The New York times 

தொடர்புடைய செய்திகள்

+ - reset