நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியன்மாரில் மோக்கா புயலின் சீற்றம்: மரண எண்ணிக்கை 81-ஆக உயர்வு

நெய்பியிடாவ்:

அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார், சட்டோகிராம் ஆகிய நகரங்களிலிருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்தன. அங்கிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 81-ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள ராக்கென் நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset