நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெரும்பான்மை கிடைக்காததால் துருக்கியில் 2-ஆவது சுற்று அதிபர் தேர்தல்

அங்காரா:

துருக்கியில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 91% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

துருக்கி நாட்டைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும்.

இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நிலையில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கமால் கிலிக்டரோக்லு 44.79 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதாரம்: www.theguardian.com

தொடர்புடைய செய்திகள்

+ - reset