நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விமானம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: ஏர்ஆசியா விளக்கம்

சிப்பாங்:

சீனா குவாங்சூவில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த ஏர் ஆசியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்கு தொழில்நுட்ப கோளாறே முதன்மை  காரணம் என்று ஏர் ஏசியா பேச்சாளர் தெரிவித்தார்.

மாறாக அவசர சூழல் உட்பட வேறு எந்தவொரு பிரச்சினையும் காரணம் அல்ல என்று ஏர் ஆசியா விளக்கமளித்துள்ளது.

குவாங்சூவில் இருந்து புறப்பட்ட ஏகே 117 விமானம் தொழில் நுட்ப கோளாறினால் திருப்பி அனுப்பப் பட்டது.

விமானக் குழுவினருக்கு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத்  தொடர்ந்து அவ்விமானம் குவாங்சூ பாயூன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியது.

குவாங்சூவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானப் பயணிகளுக்கு தங்கு வசதிகளும் திரும்பி மலேசியா வருவதற்கான வசதிகளும் செய்து தரப்பட்டது.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் தவறான தகவலை வெளியிட வேண்டாம் என்று ஏர்ஆசியா தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மாட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset