
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர்; அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்: ஜெயக்குமார்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை மறுபரிசீலனை செய்யாவிட்டால், வழக்குத் தொடர்வோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பொதுவாக, ஒரு ஆற்றின் முகத்துவார பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். அதுதான் மீனவர்களின் வாழ்வாதாரம். மெரினா கடற்கரை, முகத்துவாரத்தில்தான் உள்ளது.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்லும் நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பது, கடற்கரையின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.
இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அனுமதி கொடுத்ததை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதிமுக சார்பில் வழக்குத் தொடர்வோம்.
‘அதிமுகவில் தலைமை சரியில்லை. கட்சி 6-ஆக உடைந்துவிட்டது’ என்று பாஜக மாநிலப் பொருளாளர் சேகர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக தரப்பில் யாரும் பாஜகவை விமர்சிப்பது இல்லை.
அந்த அளவுக்கு அதிமுகவினர் எல்லோரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இதுபோன்ற கட்டுப்பாடு, பாஜகவில் இல்லை. அவர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக கிளை செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து இன்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் பழனிசாமி.
இந்நிலையில், அவர்கள் அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல.
இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm