நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவிரி

புது டெல்லி:

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு "ஆபரேஷன் காவிரி' திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது.

500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துவிட்டதாகவும், பலர் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக மோதல் நிகழ்ந்து வருகிறது.

இரு படையினரும் தலைநகர் கார்ட்டூமில் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Centre Launches 'Operation Kaveri' To Rescue Indians Stranded In Sudan: 5  Points

Sudan: Operation Kaveri launched to rescue Indians

சர்வதேச நாடுகள் தங்கள் குடிமக்களை சூடானிலிருந்து வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளன.

இந்தியர்கள் சுமார் 3,000 பேர் சூடானில் வசித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப் படையின் இரு விமானங்கள் சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சூடான் துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆபரேஷன் காவிரி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துவிட்டனர்.

அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு கப்பல்களும், விமானப் படை விமானங்களும் தயாராக உள்ளன என ஒன்றிய  அமைச்சர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset